எகிறும் எதிர்பார்ப்பு... ‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கு எதிரான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

 

தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழத்தைத் தாக்கல் செய்துள்ளார். அரசுப் பேருந்துகளின் இந்த இலவசப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்தக் கோரி இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சமூக நலத் திட்டத்திற்கு எதிரான இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.