எகிறும் எதிர்பார்ப்பு... அடுத்தடுத்து உயரும் பதக்கப்பட்டியல்... ஆசிய விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் முக்கியப் போட்டிகள்!
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்களை வெல்லும் முனைப்புடன் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று களமிறங்கும் முக்கியப் போட்டிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
வில்வித்தை: ரிகர்வ் பெண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியா - சீனா (அதிகாலை 5.55 மணி)
ரிகர்வ் கலப்பு அணிகள் அரையிறுதியில் இந்தியா - ஜப்பான் (காலை 8.20 மணி)
ரிகர்வ் ஆண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியா - ஈரான் (காலை 10.30 மணி)
குத்துச்சண்டை (இறுதிப் போட்டிகள்): பெண்களுக்கான 75 கிலோ பிரிவு: லவ்லினா (இந்தியா) - பாவ் ஜியி (சீனா) (காலை 10.00 மணி)
பெண்களுக்கான 65 கிலோ பிரிவு: பர்வீன் ஹூடா (இந்தியா) - நியென் சின் சென் (சீன தைபே) (பிற்பகல் 2.15 மணி)
ஆண்களுக்கான 80 கிலோ பிரிவு: அங்குஷ் (இந்தியா) - மின்சியோங் கிம் (தென்கொரியா) (பிற்பகல் 2.45 மணி)
ஆக்கி: பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி: இந்தியா - சீனா (மாலை 3.30 மணி)
மல்யுத்தம் (தொடக்கச் சுற்றுகள்): பெண்கள் 50 கிலோ பிரிவு - தீபன்ஷி (காலை 7.08 மணி)
ஆண்கள் 125 கிலோ பிரிவு - ரஜத் ருஹால் (காலை 7.25 மணி)
பெண்கள் 76 கிலோ பிரிவு - பிரியா (காலை 7.32 மணி)
ஆண்கள் 65 கிலோ பிரிவு - சுஜீத் (காலை 8.02 மணி)