எகிறும் எதிர்பார்ப்பு... பதக்க எண்ணிக்கை உயருமா? இன்று ஆசிய விளையாட்டில் இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள்!

 

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தொடரில் இன்று இந்தியா பங்கேற்கும் முக்கியமான போட்டிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. இன்றைய போட்டிகளின் மூலம் இந்தியாவின் பதக்கப்பட்டியல் உயரும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தடகளப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் தகுதி சுற்றில் வித்யா ராம்ராஜ் காலை 9.05 மணிக்கும், அனு ராகவன் காலை 9.13 மணிக்கும் களமிறங்குகின்றனர்.

பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிச் சுற்றில் ஷைலி சிங் மற்றும் ஆன்சி சோஜன் மாலை 3.35 மணிக்கு மோதுகின்றனர்.

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டம் இறுதிப்போட்டி மாலை 3.55 மணிக்கு ஹரிதா பாத்ரா மற்றும் உன்னதி போலன்ட் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டம் இறுதிப்போட்டியில் அனிமேஷ் குஜூர் மாலை 4.05 மணிக்கு பங்கேற்கிறார்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதிச் சுற்றில் சர்வேஷ் குஷாரே மற்றும் ஆதர்ஷ் ராம் மாலை 4.15 மணிக்குத் களமிறங்குகின்றனர்.

பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் இறுதிச் சுற்று மாலை 4.53 மணிக்கு நந்தினி பங்கேற்புடன் நடைபெறுகிறது.

குத்துச்சண்டை போட்டியில், ஆண்களுக்கான 80 கிலோ கால்இறுதிப் போட்டியில் அங்குஷ் (இந்தியா) - நெக்ருஸ் சலிமோவ் (தஜிகிஸ்தான்) காலை 9.45 மணிக்கு மோதுகின்றனர்.

பெண்களுக்கான 65 கிலோ கால்இறுதியில் பர்வீன் (இந்தியா) - நவ்பகோர் (உஸ்பெகிஸ்தான்) பிற்பகல் 2 மணிக்குப் போட்டியிடுகின்றனர்.

ஆண்களுக்கான 60 கிலோ கால்இறுதியில் சச்சின் (இந்தியா) - ஷுன்சுகே கிடமோட்டோ (ஜப்பான்) பிற்பகல் 2.45 மணிக்கு மோதுகின்றனர்.

ஆண்களுக்கான 90 கிலோவுக்கு மேலான எடைப் பிரிவு கால்இறுதியில் நரேந்தர் (இந்தியா) - அதாபோங் (தாய்லாந்து) மாலை 3.45 மணிக்குக் களமிறங்குகின்றனர்.

ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அபய் சிங் (இந்தியா) - ஈன் யோ (மலேசியா) பகல் 12.30 மணிக்கு மோதவுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அனாஹத் சிங் (இந்தியா) - சிவசங்கரி (மலேசியா) பகல் 1.30 மணிக்குப் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

கைப்பந்து: ஆண்கள் லீக் சுற்றில் இந்திய அணி வியட்நாம் அணியை பகல் 12.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

ஆக்கி : பெண்கள் லீக் சுற்றில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன.

பேட்மிண்டன்: பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் திரிஷா ஜாலி - காயத்ரி இணை மலேசியாவின் பேர்லி டான் - தினா முரளிதரன் இணையை காலை 6 மணிக்கு எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு நடைபெறும் பெண்கள் ஒற்றையர் கால்இறுதிப் போட்டிகளில் பி.வி.சிந்து மற்றும் உன்னதி ஹூடா ஆகியோர் பங்கேற்கின்றனர்.