மருத்துவ பல்கலைக்கழகத்தில் ராக்கிங்.. 38 எம்பிபிஎஸ் மாணவர்கள் சஸ்பெண்ட் - தலா ரூ.25,000 அபராதம்!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ராக்கிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 38 எம்பிபிஎஸ் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஓராண்டிற்குக் கல்வி உதவித்தொகை நிறுத்தி வைப்பு மற்றும் விடுதியிலிருந்து வெளியேற்றம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ராக்கிங் தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஒப்புதலுடன் நவம்பர் 26-ஆம் தேதி இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் 2025-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பிரிவைச் சேர்ந்த 36 மாணவர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த 2026-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 2 இளநிலை மாணவர்களும் அடங்குவர்.
UP: लखनऊ KGMU में जूनियरों को सिर झुकाकर चलवाने वाले 38 MBBS छात्र सस्पेंड, 25-25 हजार जुर्माना और हॉस्टल से भी निकाले गए।रैगिंग के आरोप में 3 महीने का निलंबन, एक साल की छात्रवृत्ति पर रोक। #KGMU #Lucknow #Ragging #UPNews #MedicalCollege https://t.co/F8HPGo9iYp
— @iamvikasbaliyan |🇮🇳 (@10iamvikas) November 28, 2026
இடைநீக்கம் செய்யப்பட்ட 38 மாணவர்களுக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களின் ஓராண்டுக் கல்வி உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, பல்கலைக்கழக விடுதியிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மூத்த மாணவர்கள் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முதலாம் ஆண்டு மாணவர்களைத் துன்புறுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீடியோ அழைப்புகள் மூலம் தூக்கத்திலிருந்து எழுப்பி இரவில் நடனமாடுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், எதிர்ப்புத் தெரிவித்தவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டித் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மூத்த மாணவர்கள் முன்பு வரிசையாக நின்று தலைகுனிந்து 'பிரணாம் மகோதய்' மற்றும் 'பிரணாம் மேடம்' என வணக்கம் சொல்லுமாறும் முதலாம் ஆண்டு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 16-ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரிசையாக நின்று தலைகுனிந்து வணக்கம் சொல்லும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் இது ராக்கிங் அல்ல என நிர்வாகம் மறுத்த நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் அதிகரித்ததால் ராக்கிங் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி நவம்பர் 19-ஆம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.