பிகினியில் ராக்கி ... ரக்ஷாபந்தன் விளம்பரத்தை நீக்கியது GIVA நிறுவனம்!
நடிகை கிருதி சனோன் அணிந்திருந்த உடை மற்றும் விளம்பரக் காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜிவா நிறுவனம் தனது ரக்ஷாபந்தன் விளம்பரத்தை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.
பிரபல நகை நிறுவனமான ஜிவாவின் விளம்பரத்தில், நடிகை கிருதி சனோன் இந்தோ-வெஸ்டர்ன் உடையில் தோன்றி தனது சகோதரருக்கும், செல்லப் பிராணியான நாய்க்கும் ராக்கி கட்டுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பாரம்பரிய விழாவின் போது அவர் அணிந்திருந்த ஆடை முறை குறித்தும், விலங்குக்கு ராக்கி கட்டியது குறித்தும் சமூக ஊடகங்களில் பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்தனர்.
இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள GIVA நிறுவனம், இந்த விளம்பரம் யாருடைய உணர்விகளையாவது புண்படுத்தியிருந்தால் அது தங்கள் நோக்கமல்ல என்று கூறியுள்ளது. இதன் காரணமாகவே அந்த விளம்பரம் அனைத்து ஊடக தளங்களிலிருந்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.