ஷாக் வீடியோ...  ரோகித் சர்மா பேருந்தில் இருந்து இறங்கியபோது கால் தவறி சறுக்கல்... பதறிய பாதுகாப்பு வீரர்கள்! 

 

 

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.போட்டி முடிந்து இந்திய அணி வீரர்கள் ஹோட்டலுக்கு திரும்பியபோது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அணி பேருந்தில் இருந்து முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இறங்கும்போது, படிக்கட்டில் கால் தவறி தடுமாறி கீழே விழுந்தார்.

ரோஹித் சர்மா தடுமாறி விழுந்ததை பார்த்த அருகில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் போலீசார் உடனடியாக அவரை நோக்கி ஓடி வந்து எழுப்பினர். பின்னர் ரோஹித் சர்மா எழுந்து ஹோட்டலுக்குள் சென்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்தில் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதனால், அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து தற்போது எந்த முடிவும் கூற முடியாது.முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் 74 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் அளித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 296 ரன்கள் இலக்கை இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. ஷுப்மன் கில் 110 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 139 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.இதற்கிடையே, ரோஹித் சர்மா பேருந்தில் இருந்து இறங்கும்போது தடுமாறி விழுந்த காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.