சென்னையில் பரபரப்பு... பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை!

 

 

சென்னை கேளம்பாக்கம் சுடுகாடு பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சாகுல் ஹமீது வயது 29 என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சுடுகாடு பகுதியில் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கொலையாளிகள் யார் என்பது குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் துப்பு துலக்கி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.