ரயில்வேயில் 1,265 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள்! பட்டதாரிகள் நவம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம்
இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்ப ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 1,265 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்குத் தகுதியுள்ள பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 2027 ஜனவரி 1-ம் தேதியின்படி 20 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக நவம்பர் 25-ம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். கணினி வழித் தேர்வு (CBT), கணினி அடிப்படையிலான திறனறித் தேர்வு (CBAT), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய கட்டங்களின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். காலிப்பணியிடங்கள், தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.