தமிழகத்தையே உலுக்கிய ரூ.1000 கோடி ஆன்லைன் மோசடி: தென் மாவட்டங்களில் 17 பேர் கைது!

 

அமெரிக்க டாலர் மதிப்பில் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி, ஆன்லைன் செயலி வழியாகப் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்துப் பெரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க டாலர் முதலீட்டில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று கூறி, எப்.கியூ.எல். என்ற இணைய வழி செயலி மூலம் இந்த நிதி மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தில்லுமுல்லு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இதுவரை தொடர்புடைய 17 பேரைச் கைது செய்துள்ளனர். மேலும், இக்கூட்டத்தைச் சேர்ந்த தப்பியோடிய மற்ற நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.