மழைநீர் தேங்கினால் ரூ.10,000 அபராதம் - அமைச்சர் கடும் எச்சரிக்கை!

 

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் சூழலில், வீடுகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் மழைநீர் தேங்காமல் பாதுகாப்பதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் பருவகால மாற்றங்களால் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வளாகங்களில் மழைநீர் தேங்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்கும் மழைநீரை முறையாக அகற்றத் தவறுகின்ற தொழிற்சாலைகள் மற்றும் பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மழைநீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்து, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கத் தேவையான அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.