மாநிலங்களுக்கு ₹1,09,019 கோடி வரிப்பகிர்வு - தமிழ்நாட்டிற்கு ₹4,466 கோடி நிதி விடுவிப்பு!
மாநிலங்களின் மூலதனம் மற்றும் வளர்ச்சி சார்ந்த செலவினங்களை விரைவுபடுத்தும் நோக்கில், அனைத்து மாநிலங்களுக்குமான வரிப்பகிர்வு தொகையாக ₹1,09,019 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ₹4,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள 28 மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு பட்டியலில் முக்கிய மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையாக உத்தரப் பிரதேசம்: ₹19,208 கோடி, பீகார்: ₹10,845 கோடி, மத்தியப் பிரதேசம்: ₹8,010 கோடி, மேற்கு வங்கம்: ₹7,866 கோடி, மகாராஷ்டிரா: ₹7,022 கோடி, தமிழ்நாடு: ₹4,466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் மூலதனச் செலவினங்களை ஊக்குவிப்பதற்காகவே இந்த கூடுதல் வரிப்பகிர்வுத் தொகை தற்காலிக அடிப்படையில் முன்பாகவே விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.