"ரூ.2,000 கோடி முறைகேடு... தவறு செய்தவர்களை விட மாட்டோம்" - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேட்டி!

 

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

தோல்வியடைந்த ஒருவரை அல்லது முன்னாள் அமைச்சரைக் கைது செய்வதில் எந்த அரசியல் பழிவாங்கும் நோக்கமும் இல்லை. ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் பள்ளிப் பாதுகாப்புச் சான்றிதழ்கள் வழங்கியதிலும், நெடுஞ்சாலைத் துறையில் தேர்தலுக்கு முன்பாக ₹2,000 கோடிக்கு பேட்ச் வொர்க் பார்த்ததாகக் கூறி பணப் பரிவர்த்தனை நடந்ததிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

ஊழல் செய்தவர்களுடன் எந்தவித உடன்பாடும் செய்து கொள்ள முடியாது. முந்தைய ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் கைதுகள் நடைபெறவில்லை, ஏனெனில் அவர்களுக்குள் புரிந்துணர்வு இருந்தது. ஆனால் தற்போதைய முதல்வர் விஜய் அப்படிப்பட்டவர் அல்ல.

திமுக ஆட்சியில் வளமான துறைகளைத் தேர்ந்தெடுத்துப் பணம் ஈட்டுவதே நோக்கமாக இருந்தது என்றும், இந்த உண்மைகளை மக்கள் முன் கொண்டு சேர்க்கவே அரசு விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.