நாடு முழுவதும் 9.34 கோடி பேரின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு... பிஎம் கிசான் 24-வது தவணையை பிரதமர் மோடி விடுவித்தார்!
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'பிஎம் கிசான்' திட்டத்தின் 24-வது தவணைத் தொகையைப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.
சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு இதுவரை 23 தவணைகளாக மொத்தம் ரூ.4.47 லட்சம் கோடி நேரடியாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 9 கோடியே 34 லட்சம் விவசாயப் பயனாளிகளுக்குப் பிஎம் கிசான் திட்டத்தின் 24-வது தவணைத் தொகை நேற்று விடுவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் பில்டி நகரில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஒரே பொத்தானை அழுத்தி ரூ.18,680 கோடியை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பி வைத்தார். இதில் குறிப்பாகக் குஜராத் மாநிலத்தில் உள்ள 52.33 லட்சம் விவசாயிகள் ரூ.1,051 கோடியைப் பலனாகப் பெற்றனர். 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, இத்திட்டத்தை விடுவிப்பதுடன் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.