பெண்களுக்கு ரூ.3,000.. பாஜக மாஸ்டர் ப்ளாண்... இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் நட்டா!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23, 2026) நெருங்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (ஏப்ரல் 14) வெளியாகிறது. பாஜக தேசியத் தலைவர்களில் ஒருவரான ஜே.பி. நட்டா, இன்று காலை 11.30 மணிக்குச் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த அறிக்கையை வெளியிடுகிறார்.
பாஜக ஏற்கனவே மேற்கு வங்கத் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதே பாணியில், தமிழகத்திலும் திமுகவின் ரூ.1,000 மற்றும் அதிமுகவின் ரூ.2,000 (குல விளக்கு திட்டம்) வாக்குறுதிகளை மிஞ்சும் வகையில், பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை குறித்த அறிவிப்பு இதில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டமும் இதில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்துதல், நெல் மற்றும் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துதல். அரசுப் பள்ளிகளில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் இலவச உயர்கல்வித் திட்டங்கள்.
ஏற்கனவே தமிழகத்தில் 'மகளிர் உரிமைத் தொகை' பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜகவின் இந்த ரூ.3,000 வாக்குறுதி தேர்தல் களத்தில் கடும் போட்டியை உருவாக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.