ரூ.400 கோடி ஊழல் வழக்கு... முத்துக்குமாரிடம் 4-வது நாளாகத் தீவிர விசாரணை!

 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்குவதில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் ரூ.400 கோடி அளவிலான மிகப்பெரிய முறைகேடு வழக்கு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய நபரான முத்துக்குமார் என்பவரிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து நான்காவது நாளாகத் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்குத் தேவையான அங்கீகாரப் புதுப்பிப்பு மற்றும் புதிய அனுமதிகளை வழங்குவதில் முறையான விதிமுறைகள் மீறப்பட்டு, பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் தீவிர முடக்கம் செய்யப்பட்ட இந்த வழக்கில், இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

முறைகேட்டின் மூலவேர்களைக் கண்டறியும் நோக்கில், காவல்துறையினர் முத்துக்குமாரிடம் சுமார் 500-க்கும் மேற்பட்ட கேள்விகளைத் தயாரித்து துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்தெந்தத் தனியார் பள்ளிகளிடம் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? அந்தத் தொகைகள் எந்தெந்த வங்கிக் கணகுகள் மற்றும் பினாமிகள் பெயருக்கு மாற்றப்பட்டன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

இவ்வழக்கில் ஓட்டுநர் சரவணன் என்பவரின் பங்கு குறித்தும், முறைகேடாக வசூலிக்கப்பட்ட பணம் ஓட்டுநர் சரவணன் மூலமாக முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டிற்கு முறைசாரா முறையில் அனுப்பி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவ்விசாரணையின் முடிவில் இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.