திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கை!
Aug 23, 2026, 12:42 IST
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் ஒரே நாளில் ரூ.4.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பதற்காக நாள்தோறும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர்.
தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவும், குடும்ப நலனுக்காகவும் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில், ஒரே நாளில் மட்டும் ரூ.4.15 கோடி ரொக்கம் வசூலாகியுள்ளது. பணம் மட்டுமன்றி தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் பக்தர்கள் பெருமளவில் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். வார விடுமுறை மற்றும் தொடர் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு திருமலையில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது.