ரூ.5 லட்சம் மோசடி... பிக்பாஸ் வர்ஷினி வெங்கட் கைது!
குறும்படம் தயாரிப்பதாகக் கூறி இளைஞரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன், கூடுதலாகப் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறும்படம் எடுப்பதற்கு முதலீடு செய்யுமாறு கூறி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து இளைஞர் ஒருவரிடமிருந்து ரூ.5 லட்சத்தைப் பெற்று வர்ஷினி வெங்கட் ஏமாற்றியுள்ளார். அதன் பின்னர் தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட அந்த இளைஞரை ஓட்டலுக்கு அழைத்துச் தாக்கியதுடன், அவரிடமிருந்த ரூ.50,000 ரொக்கம் மற்றும் இரண்டு செல்போன்களைப் பறித்துக் கொண்டு, மேலும் ரூ.27 லட்சம் கேட்டு வர்ஷினி வெங்கட் மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில், கிண்டி காவல்துறையினர் வர்ஷினி வெங்கட், சஞ்சய் உள்ளிட்ட 4 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வர்ஷினி வெங்கட், 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.