உக்ரைன் எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை மீது ரஷ்யா தாக்குதல்!

 

ரஷ்யாவின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலைகளில் ஒன்றான டாப்சே மீது உக்ரைன் இராணுவம் இன்று மீண்டும் ஒரு பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் அந்த ஆலையில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்த இக்கட்டான சூழலில் இன்று மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கிடங்குகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. எண்ணெய்க் கழிவுகள் மற்றும் எரிபொருட்கள் தீப்பற்றி எரிந்ததால் வான் உயர்ந்து கரும்புகை சூழ்ந்து அப்பகுதி முழுவதும் இருள் படர்ந்தது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தினால் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் எரிபொருட்கள் நாசமாகியுள்ளன.

தொடர்ச்சியாக ரஷ்யாவின் பொருளாதார மையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவது ரஷ்ய அதிபர் மாளிகையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் மேலும் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டு வருவதால் போர் இன்னும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.