உக்ரைன் மீதான தாக்குதல்களை 3 நாட்களுக்கு நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு!
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்கச் சிறப்புத் தூதர்கள் ஸ்டீவ் விக்ட்ஆப் மற்றும் ஜெரட் குஷ்னர் ரஷ்யா சென்றுள்ளனர். இவர்கள் விரைவில் உக்ரைன் செல்ல உள்ளனர்.
இதனிடையே, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையைக் கருத்தில் கொண்டு ரஷ்யாவும் தாக்குதலை நிறுத்த வேண்டுமென உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார். முன்னதாக ரஷ்யா மீது மூன்று நாட்கள் தாக்குதலை நிறுத்துவதாக உக்ரைன் அறிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் இந்தத் தொடர்ச்சியான அமைதி முயற்சிகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.