நடுவானில் தீப்பிடித்து விழுந்த ராணுவ விமானம்... 19 பேர் உயிரிழந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!

 

 

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானத்தில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் கெமரோவோ (Kemerovo) மாகாணத்தில் உள்ள யாகுனோவோ (Yagunovo) கிராமம் அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வழக்கமான பயணத்தில் ஈடுபட்டிருந்த அன்டோனோவ் ஏஎன்-12 (Antonov An-12) ரக ராணுவ விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த 19 பேரும் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் தீப்பிடித்த நிலையில், மீட்புக் குழுவினர் தீயை அணைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ரஷ்ய விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.