உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல் - இந்தியர் உட்பட 12 பேர் உயிரிழப்பு!

 

உக்ரைன் நாட்டின் ஒடேசா நகர் மீது ரஷ்யப் படைகள் நடத்திய கடுமையான வான்வழி மற்றும் டிரோன் தாக்குதல்களில் ஒரு இந்தியர் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உக்ரை மீது ரஷ்யா தொடங்கிய போர் ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் எத்தகைய முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

உக்ரைனின் ஒடேசா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் ரஷ்யப் படைகள் வான்வழி வெடிகுண்டு மற்றும் டிரோன் தாக்குதல்களைத் தீவிரமாக முன்னெடுத்தன. இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் என மொத்தம் 12 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் ஒரு இந்தியரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாகத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.