FACT CHECK... இந்தியாவின் S-400 அமைப்பு பாகிஸ்தானால் அழிக்கப்பட்டதா?
இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகே அதனை ஷேர் செய்யும் படி அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், S-400 அமைப்பு அழிக்கப்பட்டதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. S-400 அமைப்பு முற்றிலும் பாதுகாப்பானது, அதற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என இந்திய பாதுகாப்புத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
600 கி.மீ. தொலைவில் வரும் ஏவுகணைகள், ட்ரோன்களை ட்ராக் செய்து, அவை 400 கி.மீ. தொலைவில் வரும்போது தாக்கி அழிக்கும்.அனைத்து விதமான போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கூட இடைமறித்து அழிக்கக்கூடியது.மிஸைல் லாஞ்சர் (Missile Launchers), சக்திவாய்ந்த ரேடார், கமாண்ட் சென்டர் (Command Centre) 3 பாகங்களைக் கொண்டது. ரஷ்ய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு என்பது உலகின் மிகவும் மேம்பட்ட ஒரு நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்று எனத் தெரிவித்துள்ளது.