சபரிமலையில் தரிசனத்தின்போது சோகம்: 63 வயது பக்தர் மயங்கி சரிந்து உயிரிழப்பு!  

 

 

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த 63 வயது பக்தர் ஒருவர், கோவில் வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருவனந்தபுரம் மாவட்டம் பேரூர் பகுதியில் கடை நடத்தி வந்த கே.வி. பாபு (63), சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் சென்றிருந்தார். இன்று காலை தரிசனத்திற்காக 18 புனிதப் படிகளையும் ஏறிய அவர், கோவிலின் கொடிமரம் அருகே சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக கோவில் வளாகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி பாபு உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் பம்பாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தேவையான நடைமுறைகளுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.