ஒரே வாரத்தில் சபரிமலையில் 7 பக்தர்கள் உயிரிழப்பு...பக்தர்களுக்கு மருத்துவ எச்சரிக்கை!

 

 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 44 வயது விமல் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் நவம்பர் 18 முதல் 24-ஆம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் சபரிமலையில் 7 பக்தர்கள் மாரடைப்பு மற்றும் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில், சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் இதயப் பாதிப்புக்கு உள்ளான 14 பக்தர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மலை ஏறும் பக்தர்கள் தங்கள் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.