undefined

 சம்மரில் கொண்டாட்டம்...  20 ஆண்டுகள் கழித்து மீண்டும்  ’சச்சின்’  ரீரிலீஸ்!

 


தமிழ் திரையுலகில் இளையதளபதி நடிகர் விஜய் நடிப்பில்  சச்சின் திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2005ம் ஆண்டு சச்சின் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் ஜெனிலியா, வடிவேலு உட்பட பல நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்திருந்தனர்.  சச்சின் திரைப்படம் காதல் திரைப்படமாக உருவான இது, அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டது.  இந்தாண்டுடன் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

தற்போது மீண்டும்   சச்சின் படத்தை 2025 ஏப்ரல் மாதம் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு இருப்பதாக  தயாரிப்பாளர் எஸ். தாணு தெரிவித்திருந்தார்.இந்நிலையில், மறுவெளியீட்டுக்கான புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். சச்சின், 2002 ல் வெளியான நீத்தோ  என்ற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!