undefined

சோகம்.. பயங்கரமான கார் விபத்து.. பரிதாபமாக பலியான எஸ்.ஐ மகன்..!

 
விபத்தில்  காவல் ஆய்வாளரின் மகன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சுரேஷ் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சென்றார். அந்த காரில் மனைவி லெட்சுமிதேவி 45, மாமியார் சந்திரவதனம் 67, மகன் சூரியபிரசாத் 15, மகள் பிரித்திகா 20, ஆகியோர் பயணித்து வந்தனர். அப்போது கருங்காலக்குடி நான்கு வழி சாலையில் கார் கட்டுபாட்டை இழந்து விபத்தானது.

இந்த விபத்தில் காரில் வந்த அவரது மகன் சூரிய பிரசாத் உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் சூரிய பிரசாத் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.