சோகம்.. பெண் ஓட்டுநர் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!
Updated: Oct 9, 2023, 18:50 IST
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த 11 பேர் புரோட்டூரில் இருந்து ஆட்டோவில் சென்று உள்ளனர்.இந்நிலையில் ஆட்டோ லாரியை கடக்க முயன்றபோது, எதிரே எர்ரகுண்ட்லாவில் இருந்து வந்த பேருந்து மோதியது. இந்த விபத்தில் பெண் டிரைவர் உட்பட ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த முஹம்மது (25), ஷாகிர் (10), ஹசீனா (25), ஆமினா (20) ஆகியோர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். பின்னர் விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த ஜம்மலமடுகு டிஎஸ்பி நாகராஜூ, எர்ரகுண்ட்லா தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.