கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் பயன்பெற உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.30,000 மாத ஊதியம் தற்போது ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 8,741 பேரும், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் 319 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களும் பயனடைவார்கள்.
ஊதிய உயர்வு விவரம்
| கல்லூரி வகை |
பழைய ஊதியம் |
புதிய ஊதியம் |
|---|---|---|
| கலை, அறிவியல் கல்லூரி |
₹30,000 |
₹35,000 |
| பொறியியல் கல்லூரி |
₹30,000 |
₹35,000 |
| பாலிடெக்னிக் கல்லூரி |
₹25,000 |
₹30,000 |