சிவகாசியில் ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை... எதிர்பார்த்த இலக்கை எட்டாத வர்த்தகம்

 

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் ரூ.7,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக விற்பனையாளர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு பட்டாசு விற்பனை ரூ.10,000 கோடியை எட்டும் என வியாபாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், எதிர்பார்த்த அளவைவிட விற்பனை குறைந்து சுமார் ரூ.7,000 கோடியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை.

சிவகாசி பட்டாசுத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் வாழ்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் விற்பனை நிலவரம் தொழில்துறையினரின் கவனத்தைப் பெற்றுள்ளது.