சேலத்தில் பட்டப்பகலில் ரவுடி டேவிட் வெட்டிக்கொலை!

 

 

சேலம் ரெட்டிப்பட்டி பகுதியில் பட்டப்பகலில் டேவிட் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூரமங்கலம் போலீசார், டேவிட்டின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொலைக்கான காரணம், முன்விரோதம் ஏதேனும் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.