நடிகை சமந்தா கர்ப்பம்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா குறித்துச் சமூக வலைத்தளங்களில் ஒரு புதிய தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகத் திரைப்படத் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. அந்தப் புகைப்படங்களில் அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களைக் கூர்ந்து கவனித்த ரசிகர்கள் பலர், அவர் விரைவில் தாயாகப் போகிறார் எனப் பதிவிட்டு வருகின்றனர்.
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய தெலுங்குத் திரைப்படமான 'மா இன்டி பங்காரம்' இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்தச் செய்தி அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சமீபத்தில் சில விளம்பர நிகழ்வுகளில் அவர் புடவை அணிந்து வந்தபோது எடுத்த புகைப்படங்களை வைத்து, அவருக்கு 'பேபி பம்ப்' தெரிவதாக இணையவாசிகள் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதனால் திரையுலக வட்டாரங்களிலும், ரசிகர் பக்கங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இந்தத் திடீர் வதந்திகள் குறித்து நடிகை சமந்தா தரப்பிலிருந்தோ அல்லது அவரது அதிகாரப்பூர்வ மேலாண்மைத் தரப்பிலிருந்தோ இதுவரை எவ்விதத் தெளிவான விளக்கமும் முறைப்படி அளிக்கப்படவில்லை. சமந்தா தனது உடல்நலக் குறைபாடுகள் காரணமாகச் சில காலம் திரையுலகில் இருந்து தற்காலிகமாக விலகியிருந்த நிலையில் மீண்டும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது