செம!! தமிழகம் முழுவதும் கல்லூரிகள் , பல்கலைக் கழகங்களில் ஒரே பாடத்திட்டம்!!

 

தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தரத்திற்கேற்ப பாடத்திட்டங்கள்  மாறி மாறி இருந்து வருகின்றன. இதனை மாற்றி தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  இந்தியா முழுவதும்  உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 கூடுதலாக ஊதியம் வழங்கப்படும்,

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள, பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும், பல்கலைக்கழகங்களில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்  நியமனத்திற்கு   தேர்வு செய்ய குழு அமைத்து வெளிப்படையாக தேர்வு செய்யப்படும். பல்கலைக்கழக விதிகளில் மாற்றம் ஏற்படுத்தி, ஒரே மாதிரியான ஊதியம், தகுதி இவைகள் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.    

“தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும். காலியாக உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியிடம் நிரப்பப்படும். 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. மாணவர்கள் கல்லூரிகள் மாறும் போது அவர்களுக்கு ஒரே பாடத்திட்டம் எளிதாக இருக்கும். அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக சந்திப்போம்” எனக் கூறியுள்ளார். உயர் கல்வி அமைச்சரின் இந்த முடிவு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!