பாம்பு கடித்து 2 குழந்தைகள் பலி... ஒரு குழந்தை மரணத்தில் சந்தேகம்... பெற்றோர் பெரும் சோகம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், ஒரு சிறுமியின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.பாம்பு கடித்ததால் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. இதில் தர்ஷினி என்ற சிறுமியின் உடலில் பாம்பு கடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மற்றொரு சிறுமியான ஜனனியும் உயிரிழந்துள்ளார். குழந்தைகளின் தாய்க்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தர்ஷினியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இரண்டு குழந்தைகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்தும், குறிப்பாக தர்ஷினியின் மரணம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற உள்ளது.