undefined

இன்று பசும்பொன் பொதுக்கூட்டத்தில் புது கட்சியை அறிவிக்கிறார் சசிகலா? எகிறும் எதிர்பார்ப்பு!

 

இன்று தமிழகம் முழுவதும் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சசிகலா நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இன்று பசுப்பொன்னில் நடைபெற இருக்கும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் பயணத்தின் அடுத்தக்கட்டம் குறித்து அறிவிக்கப்போவதாக கூறினார். 

இன்று சசிகலா புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் பெயர் மற்றும் கொடியை அவர் இன்று பசும்பொன்னில் அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல்கள் வலம் வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்களைக் களம் இறக்கி, சுமார் 40 முதல் 50 தொகுதிகளில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை எதிர்த்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

"துரோகிகளையும் எதிரிகளையும் வேரறுப்போம்" என அவர் ஏற்கனவே தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்றைய அறிவிப்பு அதிமுகவின் வாக்கு வங்கியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.