திரையுலகில் பெரும் சோகம்... நகைச்சுவை நடிகர் சதீஷின் தந்தை காலமானார்!
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஷின் தந்தை காலமான சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் மறைவைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெற்ற தந்தையை இழந்து வாடும் நடிகர் சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சதீஷின் தந்தை மறைந்த செய்தி அறிந்ததும் அவரது சொந்த ஊரைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோலத் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் நேரில் வந்து அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வரும் திரையுலகினரின் வருகையால் அப்பகுதியே சோகமயமாகக் காட்சிளிக்கிறது.
இதனிடையே அரசியல் பிரபலங்களும் நேரில் சென்று சதீஷின் தந்தைக்குத் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியான வினோஜ், நேரில் சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்களைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து இரங்கலைப் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் சதீஷின் ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.