சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி; பக்தர்களுக்கு வனத்துறை அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதோஷம் மற்றும் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு, வரும் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதன்படி, தொடர்ந்து நான்கு நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்லலாம்.
எனினும், மலைப்பகுதியில் மழை பெய்து ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மலை ஏறுவதற்குத் தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், மலைக்குச் செல்லும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனத்துறையினரின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.