undefined

தீர்க்காயுள் தரும்  சனிக்கிழமை எண்ணெய்க் குளியல் மகத்துவம்! 

 

முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய வழக்குகளில் ஒன்றாக சனிக்கிழமையன்று எள் எண்ணெய் தேய்த்து குளிப்பது குறிப்பிடத்தக்கது. அந்நாளில், தலை முதல் கால் வரை நல்லெண்ணெய் தடவி சில நேரம் ஊறவைத்து குளிப்பது வழக்கமாக இருந்தது. இதற்கான காரணமாக உடம்பின் சூடு தணியும் என்ற நம்பிக்கை நிலவியது. ஆனால், இதற்குப் பின்னால் விஞ்ஞான ரீதியிலும் ஒரு ஆழமான விளக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜோதிடக் கோணத்தில், சனிக்கிரகம் பாபக் கிரகமாகக் கருதப்படுகிறது. இது சில சமயங்களில் மனித உடலுக்கு தீய கதிர்வீச்சுகளை அனுப்புவதாகவும், குறிப்பாக ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் போது அந்த கதிர்வீச்சுகள் தீவிரமடைவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த நபரின் உடல் மற்றும் மனநிலைகளில் பாதிப்புகள் தோன்றலாம். ஆனால் எள் எண்ணெய் உடலுக்கு தடவியபோது, அது ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்பட்டு அந்த கதிர்வீச்சுகளை தடுக்கின்றது.

சனிக்கிரகத்தின் கதிர்வீச்சுகள் நரம்பு மண்டலத்தையும் சிந்தனை திறனையும் பாதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதை சமநிலைப்படுத்தும் எளிய வழியாக சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் குளியல் பரிந்துரைக்கப்பட்டது. இப்போது, நவீன வாழ்க்கை முறை மற்றும் நாகரீக மாற்றங்களால் இந்த பாரம்பரியம் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டது. எனினும், முன்னோர்களின் இந்த பழக்கம் உடல்நலனுக்கும் மன அமைதிக்கும் இணையாக ஒரு விஞ்ஞான ஆதாரமிக்க வழிபாடாகக் கருதப்படலாம்.

ஆண்களுக்கு 
ஞாயிறு எண்ணெய் குளியல் - இருதயத்தில் தாபம்.
திங்கள் எண்ணெய் குளியல் - பொழிவு தரும் மேனி.
செவ்வாய் எண்ணெய் குளியல் - அற்பாயுள்.
புதன் எண்ணெய் குளியல் - செல்வநிலை மேலோங்கும்.
வியாழன் எண்ணெய் குளியல் - தரித்திரம் தாண்டவம் ஆடும்.
வெள்ளி எண்ணெய் குளியல் - ஆண்களுக்கு ஆபத்தை தரும்.
சனி எண்ணெய் குளியல் - தீர்க்காயுள் தரும்.
 
பெண்களுக்கு 
செவ்வாய் எண்ணெய் குளியல் - பாக்ய விருத்தி தரும்.
வெள்ளி எண்ணெய் குளியல் சௌபாக்கியவதியாக வாழ்வார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!