5 கிலோ தங்கம்.. ரோல்ஸ் ராய்ஸ் கார்... 70 வயது ஷேக்கிற்கு 19 வயது மணப்பெண் .. சவுதியில் நடந்த பிரம்மாண்டத் திருமணம்!

 

சவுதி அரேபியாவில் 70 வயதான ஒரு கோடீஸ்வர ஷேக், தன்னை விட 51 வயது குறைவான 19 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. வயது வித்தியாசம் ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அந்தத் திருமணத்தில் மணமகன் அள்ளி வீசிய பரிசுகள் பலரையும் வாயடைக்க வைத்துள்ளன. தனது இளம் மனைவிக்கு 5 கிலோ தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன 'ரோல்ஸ் ராய்ஸ்' (Rolls-Royce) சொகுசு காரை அவர் பரிசாக வழங்கியுள்ளார். இந்த ஆடம்பரத் திருமணத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

அதே சமயம், இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. சமீபகாலமாகச் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் அச்சு அசலாக உண்மை போலவே இருப்பதால், இதுவும் அத்தகைய 'ஏஐ' தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்ற கோணத்தில் விவாதங்கள் நடக்கின்றன. இருப்பினும், மத்திய கிழக்கு நாடுகளில் இது போன்ற பெரும் வயது இடைவெளி கொண்ட திருமணங்கள் அவ்வப்போது நடப்பது வழக்கமான ஒன்றுதான் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எது எப்படியோ, இந்தச் சவுதி திருமணம் தற்போது இணையத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.