லண்டன் செல்ல விடாமல் தடுத்ததாக சவுரவ் தாஸ் குற்றச்சாட்டு: பாஸ்போர்ட் பிழையால் நடவடிக்கை
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உரையாற்றச் செல்லவிருந்த தன்னை, டெல்லி விமான நிலையத்தில் மத்திய பாஜக அரசு தடுத்து நிறுத்திவிட்டதாக காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகி சவுரவ் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார். குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தன்னைத் தடுத்து நிறுத்தியதாகவும், இதற்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சவுரவ் தாஸின் பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த ஊர் சென்னை எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாகச் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர் பதிலளிக்கும் வரை அந்த பாஸ்போர்ட்டைப் பயன்படுத்திப் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.