சவுக்கு சங்கரின் ஒரே மகன் தியோ தூக்கிட்டு தற்கொலை!

 

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மற்றும் நிலவுமொழி செந்தாமரை தம்பதியின் ஒரே மகனான தியோ இன்று  தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 13.

சவுக்கு சங்கர் மற்றும் நிலவுமொழி செந்தாமரை இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மகன் தியோ தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் 13 வயதான தியோ இன்று தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவனின் இந்த எதிர்பாராத மறைவுச் செய்தி கேட்டுப் பல்வேறு தரப்பினரும், இணையவாசிகளும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.