SCAN பண்ணுங்க.. SCAM பாருங்க.. தமிழகம் முழுவதும் வைரலான திமுகவினரின் பிரச்சார யுத்தி!
தமிழகம் முழுவதும் நேற்று முதல் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் உருவப்படத்துடன் கூடிய போஸ்டரில் க்யூ ஆர் கோட் இருக்கிறது. இதை ஸ்கேன் செய்து, பாஜகவின் ஊழலைத் தெரிந்து கொள்ளுங்கள் என்கிற பிரச்சார யுத்தி வைரலாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தபோது பல ஊழல்களை பாஜக அரங்கேற்றியுள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக போலி வாக்குறுதிகளுடன் அதானி, அம்பானி கடன் தள்ளுபடி, தேர்தல் பத்திர ஊழல், பிரதமர் மோடி நிதி என பல வழிகளில் நூதன முறையில் பாஜக ஏமாற்றியுள்ளதாக நேரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்த காட்சியில் சிஏஜி அறிக்கை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் கோடி தள்ளுபடி, சுங்கச்சாவடிகளில் முறைகேடு வசூல், துவாரகா சாலை அமைக்கும் ஊழல், தேர்தல் பத்திர ஊழல் என பல விஷயங்கள் ஆடியோ மூலம் ஒளிபரப்பாகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!