‘ஸ்கார்பேஸ்’ நடிகர் மார்க் மார்கோவிஸ் மரணம்! ரசிகர்கள் அஞ்சலி!
 

 

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் மார்கோவிஸ் காலமானர்.  அவருக்கு வயது 83.  ஹாலிவுட் திரைப்படங்களிலும்,சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வந்த மார்க், ரசிகர்களிடையே தனது தனிப்பட்ட நடிப்புத் திறமையால் தனித்த கவனத்தைப் பெற்றிருந்தார். 

உலகளவில் புகழ்பெற்ற பிரேக்கிங் பேட், பெட்டர் சால் சால் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருந்த திரு மார்க், ஸ்கார்பேஸ் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

இவரது புகழ் பிரேக்கிங் பேட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஹெக்டர் சாலமான்கா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததின் மூலம் உலகம் முழுவதும் பரவியது.பென்சில்வேனியா மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட இவர், திரைப்படங்களில் நடிக்க தொடங்கியதை தொடர்ந்து நியூயார்க் நகருக்கு குடி பெயர்ந்தார். இவருக்கு ஜாகுலின் என்ற மனைவியும், 1 மகனும் உள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!