ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை... நவம்பர் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தேசிய ஆசிரியர் நல நிதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்விக்காக நிதி உதவி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிற்கல்வி பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.50,000 மற்றும் பட்டயப்படிப்பு (டிப்ளமா) படிப்புகளுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும். ஒரு குழந்தைக்கு ஒருமுறை மட்டுமே இத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.7.20 லட்சத்தை மீறக்கூடாது. ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
உதவித்தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, நவம்பர் 10ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு நேரடியாக அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!