undefined

மத கலவரத்தில் முடிந்த பள்ளி மாணவர்கள் சண்டை.. இஸ்லாமியர் வீட்டை இடித்த மாவட்ட நிர்வாகம்!

 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது இரு மாணவர்களும் தகராறு செய்ததாகவும் இதன் போது ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தொடையில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவனை பள்ளி நிர்வாகம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. கத்தியால் குத்திய மாணவன் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன, இதற்கிடையில், பள்ளிகளுக்கு மாணவர்கள் கூர்மையான பொருட்களை கொண்டு வருவதற்கு ராஜஸ்தான் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களின் புத்தக பைகளை ஆசிரியர்கள் தினமும் சோதனை செய்ய வேண்டும் என்றும், யாராவது கூர்மையான பொருட்களை கொண்டு வந்தது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா