பிரிக்ஸ் உச்சி மாநாடு: டெல்லியில் பள்ளி, கல்லூரிகள், உச்ச நீதிமன்றம், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

 

தலைநகர் டெல்லியில் இந்தியா தலைமையில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீனா அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

மாநாட்டின் பாதுகாப்பு மற்றும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் உள்ள 35 முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு ஏற்பாடுகள் மற்றும் தீவிர பாதுகாப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, நாளை டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்குச் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.