கேன்சரைப் பரப்பும் காட்டு கெளுத்தி மீன் - விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

 

கனடா மற்றும் அமெரிக்க எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் வாழும் காட்டு கெளுத்தி மீன்களுக்கு இடையே, புற்றுநோய் செல்கள் ஒரு மீனிலிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகத் தொற்றிப் பரவுவதை விஞ்ஞானிகள் உலகிலேயே முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.

வழக்கமாகப் புற்றுநோய் என்பது உடலுக்குள் உருவாகும் உயிரணு மாற்றங்களால் ஏற்படுவதாகும். ஆனால், இந்த ஆற்று கெளுத்தி மீன்களிடையே புற்றுநோய் செல்கள் ஒரு தொற்றுநோயைப் போல நேரடியாக ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்குப் பரவுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை புற்றுநோய் செல்கள் மீன்களின் உடலுக்குள் பரவினாலும், இந்தக் காட்டு கெளுத்தி மீன்களை சமைத்து உணவாக உட்கொள்ளும் மனிதர்களுக்குப் புற்றுநோய் பரவுவதற்கான எந்தவொரு ஆதாரமும் சாத்தியக்கூறுகளும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீன்களுக்கு இடையே புற்றுநோய் நேரடியாகப் பரவும் இந்த விசித்திரமான நிகழ்வு குறித்த கூடுதல் ஆய்வுகளைப் சர்வதேச கடல்சார் மற்றும் மருத்துவ அறிவியலாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.