அசத்தல்... பிளாஸ்டிக் கழிவுகளை 3 மணி நேரத்தில் லூப்ரிகண்ட் எண்ணெயாக மாற்றும் புதுத் தொழில்நுட்பம்!
மறுசுழற்சி செய்ய மிகவும் கடினமான பிளாஸ்டிக் வகைகளில் ஒன்றான பிவிசி (PVC) கழிவுகளை, வெறும் 3 மணி நேரத்தில் உயர் செயல்திறன் கொண்ட லூப்ரிகண்ட் எண்ணெயாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குழாய்கள், கம்பிகள் மற்றும் அன்றாடப் பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பிவிசி பிளாஸ்டிக்கில் உள்ள அதிகப்படியான குளோரின் மற்றும் சேர்க்கைப் பொருட்கள் காரணமாக, அவற்றை மறுசுழற்சி செய்வது பெரும் சவாலாக இருந்து வந்தது.
இந்தப் புதிய ஆய்வில், கழிவு பிவிசி பிளாஸ்டிக்கை வேதிப் பொருட்கள் மற்றும் வெப்பச் செயல்பாடு மூலம் 3 மணி நேரத்தில் செயற்கை லூப்ரிகண்ட் எண்ணெயாக விஞ்ஞானிகள் மாற்றியமைத்துள்ளனர். வழக்கமான மறுசுழற்சி முறையைக் காட்டிலும், கழிவுகளை மதிப்புமிக்கத் தொழிற்சாலைப் பொருளாக மாற்றும் இந்த அணுகுமுறை சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கப் பெரிதும் உதவும் எனக் கருதப்படுகிறது.
இயந்திரங்கள் மற்றும் என்ஜின்களின் செயல்பாட்டிற்குத் தேவையான லூப்ரிகண்ட் எண்ணெய்களைத் தட்டுப்பாடின்றித் தயாரிக்க இந்தக் கண்டுபிடிப்பு புதிய வழியைத் திறந்துள்ளது. பெரிய அளவில் இதைத் தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்