Screen Time ஐ குறைத்து  நவீன அடிமைத்தனத்திலிருந்து விடுபடுங்க...  மாணவர்களுக்கு  பிரதமர் மோடியின் எச்சரிக்கை!

 

 

மாணவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை மொபைல் போன்கள் மற்றும் பல்வேறு திரைகளின் முன்பாகச் செலவிடுவது நவீன அடிமைத்தனத்திற்கு ஒப்பானது என்று பிரதமர் மோடி கடுமையாக எச்சரித்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினர் தொழில்நுட்பங்களின் பிடியில் சிக்கித் தவிப்பது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பெரிதும் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்குத் திரை நேரத்தைக் குறைத்து, மைதான விளையாட்டுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான கலை நடவடிக்கைகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே குழந்தைகளின் உடல் மற்றும் மன நலம் மேம்படுவதோடு, ஆக்கபூர்வமான சிந்தனைகளும் வளரும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நல்மாற்றத்திற்காகப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கைகோர்த்துச் செயல்பட வேண்டும் என அவர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டு முயற்சியின் மூலமாக மட்டுமே மாணவர்களைத் தவறான வழிகளில் இருந்து மீட்டுச் சரியான பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.