சீட் பெல்ட் போட மறுத்த சிறுவன்... விமானம் ரத்து... பயணிகள் கடும் அவதி!
கனடாவின் விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கார்ட்டர் ஏர்லைன்ஸ் விமானம் டொராண்டோ நோக்கிச் செல்வதற்காகத் புறப்படத் தயாரான நிலையில் நின்றது. அப்பொழுது விமானத்தில் பயணம் செய்த ஒரு சிறு குழந்தை தனது இருக்கையில் அமர மறுத்துவிட்டதுடன் சீட் பெல்ட் அணியவும் அடம் பிடித்துக் கடும் பிடிவாதம் பிடித்தது. குழந்தையின் பெற்றோர் மற்றும் விமானப் பணியாளர்கள் எவ்வளவு முயன்றும் அக்குழந்தையைச் சமாதானப்படுத்த முடியவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு விமானம் உடனடியாகப் பாதியிலேயே திருப்பி அனுப்பப்பட்டு மீண்டும் முனையத்திற்கே கொண்டுவரப்பட்டது. குழந்தையையும் அதன் பெற்றோரையும் உடைமைகளுடன் கீழே இறக்குவதற்குள் நள்ளிரவு 12.30 நிமிடம் ஆகிவிட்டது. அதற்கு மேல் விமான நிலையத்தின் ஓடுதளம் மூடப்பட்டுவிடும் என்பதால் அன்றைய தினத்திற்கான விமானச் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதனால் விமானத்தில் பயணம் செய்ய இருந்த மற்ற பயணிகள் அனைவரும் தங்களின் பயணத்தை முடிக்க முடியாமல் மறுநாள் விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். இச்சம்பவத்திற்காக விமான நிறுவனத்தின் சார்பில் பயணிகளிடம் உரிய மன்னிப்பு அதிகாரப்பூர்வமாகக் கோரப்பட்டுள்ளது. ஒரு சிறுவனின் பிடிவாதத்தால் விமானப் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்ட இந்த விநோதச் சம்பவம் சர்வதேச அளவில் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.