ரகசியக் காதல் அம்பலம்; முதலாளியின் மனைவியின் அழகில் மயங்கிய கார் ஓட்டுநர் தற்கொலை!
திருப்பத்தூர் அருகே கார் ஓட்டுநருக்கும் தனது முதலாளியின் மனைவிக்கும் இடையே இருந்த ரகசியத் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இருவரும் தற்கொலை செய்துகொள்ள முயன்றதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அன்பரசனுக்கும், அவரது முதலாளியின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் ரகசியக் காதலாக மாறியுள்ளது.
இருவருக்கும் இடையே இருந்த காதலும் ரகசியத் தொடர்பும் பெண்ணின் கணவருக்குத் தெரியவந்ததை அடுத்து, குடும்பத்தில் பெரும் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன காதலர்கள் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஜவ்வாதுமலை அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற இருவரும், அங்குள்ள மரத்தில் தூக்குக் கயிறு கட்டித் தற்கொலைக்கு முயன்றனர். அப்போது கார் ஓட்டுநர் அன்பரசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மரத்தில் ஏற முயன்ற அந்தப் பெண் தவறி கீழே விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த அன்பரசனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை முயற்சி குறித்துத் தப்பிய பெண்ணிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.